26 March 2017

தஞ்சைப் பெரிய கோயில்..


அனைவருக்கும்  வணக்கம்....போன வருடம் தீபாவளி அன்று  சொந்தங்கள் அனைவரையும் கண்டு மகிழ்ந்து...மதியத்திற்கு மேல் தொலைக்காட்சி  பார்க்கும் சூழல்...

சரி..இந்த தொல்லைக்காட்சியை பார்ப்பதை விட சிறப்பான
  தஞ்சைப் பெரிய கோயிலை  சென்று  பார்க்காலம்  என திடீர் முடிவாக  கிளம்பி தஞ்சை பெரிய கோவிலை  சென்று தரிசித்தோம்......ரசித்தோம்......ஆஹா......என்ன ஒரு இடம்....பராமரிப்பும் அருமை.......கண்ணால் கண்டு அனுபவிக்க வேண்டிய ஒரு அருமையான இடம்....

இனி உங்கள் கண்களுக்கும் விருந்தாக...தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்  என்றும்  தஞ்சைப் பெரிய கோயில் அல்லது  தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அறியப்படும்   இக்கோவில்    சிவபெருமானுக்குரிய  ஸ்தலம்....


தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதின் வடமொழியாக்கமே பிரகதீசுவரர் கோயில். இக்கோயில் தஞ்சை பெரிய கோயில் , பெரிய கோயில், இராஜராஜஸ்வர கோயில், இராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.


இந்தியாவில் அமைந்துள்ள அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட கோவில்களில் இதுவும் ஒன்றாகும்...


இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது..


முகப்புகோவில் அமைப்பு வரைப்படம்..

லிங்கங்களில் மிகப் பெரியது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம். இதனாலேயே இக்கோயில் பெரிய கோயில் என்று அழைக்கப்படுவதுண்டு..


இக்கோயில் கட்டப்பட்ட காலம், சோழராட்சியின் பொற்காலமாகும். தமிழ்நாடு முழுவதும் ஒரே குடைக்கீழ் இருந்ததுடன், எல்லைக்கப்பாலும் பல இடங்கள் சோழப் பேரரசின் கீழ் இருந்தது, அதனால்  பெருமளவு வருவாயும் கிடைத்து  வந்தது. அதிகமான ஆள்பலமும், அரசனின்  சிவபக்தியோடு கூடிய ஆளுமையும், இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டிமுடிப்பதற்குத் துணையாக இருந்தது.


1003 ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010 ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியாகியது .
இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் (கி.பி.985-1014) கட்டப்பட்டது.  ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆனது.


தொடரும்.......


அன்புடன்

அனுபிரேம்
17 comments:

 1. ஆகா.. எங்கள் ஊர் பெரிய கோயிலைப் பற்றி பதிவு..

  அருமை.. அழகிய படங்கள்.. சிறப்பு..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா...ஆமா ரொம்ப பிரமாண்டமாக அழகா இருந்துச்சு...

   Delete
 2. அழகான கோவில். மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்னம் உண்டு. கூடவே தஞ்சையின் அரண்மனை மற்றும் வேறு சில இடங்களும் பார்க்க வேண்டும்.....

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. சமயம் கிடைக்கும்போது சென்று வாருங்கள்...

   நாங்களும் மீண்டும் ஒருமுறை சென்று மற்ற இடங்களை பார்க்கனும்...அன்றைக்கு பெரிய கோவில் மட்டுமே பார்க்க முடிந்தது..

   வருகைக்கு நன்றி..

   Delete
 3. அருமை தொடர்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து வாங்க...

   இக்கோவிலின் பல பல சிறப்புகளை அடுத்த பதிவுகளில் காணலாம்..

   Delete
 4. நானும் அறிந்ததுண்டு இக்கோயில் பற்றி, மிக அருமை திடீர்த் தரிசனம் கிடைத்தது.

  முதல் படமும் கடசிப் படமும் கண்ணுக்கு தெரியுதில்லையே... அதுசரி இன்னும் புறப்படவில்லையோ? ஹொலிடேக்கு போயிட்டீங்க ஊருக்கு என நினைச்சேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அதிரா...

   நீங்க சொன்ன இரண்டு படமும் இங்கு நல்லா தெரியுதே...

   இன்னும் ஊருக்கு போகல...தேர்வு நடந்து கொண்டு இருக்கிறது... முடிந்த பிறகு தான் போகணும்..

   அப்புறம் ஏன் அவசரமா கோடை விடுமுறைக்கு ஒரு பதிவு போட்டனு கேக்காதிங்க...

   தேர்வே இங்க கொண்டாட்டமா தான் நடக்குது...கால் நாள்(11.3௦ am) தான் பள்ளி அப்புறம் ஒரே happy தான் பசங்களுக்கு...ஸ்...அப்பா..

   Delete
  2. ஊருக்கு போனாலும் அப்ப அப்ப பதிவு வரும்....

   Delete
 5. எனக்கு மிகமிக பிடித்தமான கோவில். அமைதியான ஓர் அழகு இக்கோவிலில் இருக்கு அனு. கோவில் பிரகாரத்தில் நாள் முழுக்க,ஏன் அப்படியே இருக்கலாம் போல ஓர் உணர்வு. இந்தியா வரும்போது (4தடவை வந்துவிட்டேன்.4தரமும் சென்றுவந்தேன்)இங்கு செல்லாமல் வந்ததில்லை. நன்றி அனு பகிர்வுக்கு.
  (கோவிலுக்கு போய் புண்ணியம் தேடிவிட்டீங்க. தொல்லைகாட்சி பார்க்காமல்..ஹி..ஹி)

  ReplyDelete
  Replies
  1. வாங்க அம்மு..

   சிறு வயதில் போனது...அப்புறம் இப்பதான் ..ஆன நீங்க சொல்லற மாதரி ரொம்ப அருமையான உணர்வு அங்க இருக்கும் போது...என்னைய விட பசங்க ரொம்ப சந்தோசமா இருந்தாங்க...அதிக அலைச்சல் இருந்தும் அவங்க போட்ட ஆட்டம் ரொம்ப அதிகம்...

   ...ரொம்ப சரி ...கொடுமையான படங்களை பார்க்காம கொஞ்சம் புண்ணியமும் தேடியாச்சு..

   Delete
 6. செல்ல வேண்டும் என்று மனதில் நினைத்து வைத்திருக்கும் கோவில்...

  முதல் படமும் கடைசிப் படமும் தெரியவில்லை...

  ReplyDelete
  Replies
  1. விடுமுறைக்கு வரும் போது வாய்ப்பு கிடைத்தால் குழந்தைகளுடன் போய் வாங்க...குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்...

   படங்களை இப்போ சரி செஞ்சு இருக்கேன்...
   இப்போ தெளிவாக தெரியும்னு நினைக்கிறேன்..

   Delete

 7. கோயில்கள் மிக அழகு அதிலும் தமிழக கோவில்கள் மிக மிக அழகு மாற்று மதத்தை சார்ந்தவன் என்றாலும் எனக்கு கொவிலுக்கு சென்றுவருவது மிகவும் பிடிக்கும் ஒவ்வொரு கோவிலுக்கு ஒரு வாசனை உண்டு...


  அதிரா சொலுவது போல இரண்டு படங்களும் தெரியவில்லை.....

  ReplyDelete
 8. நீங்கள் சொல்லுவது போல் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு சிறப்பும், அழகும் உண்டு... அதை ரசிக்க ரசிக்க மேலும் பல இடங்களுக்கு சென்று பார்க்க வேண்டும் என்னும் ஆவல் அதிகரிக்கிறது...

  படங்கள் இப்பொழுது தெரியும் என நினைக்கிறேன்...சரி செய்துள்ளேன்..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். அனு இப்ப தெரிகிறது. எனக்கும் முதலில் தெரியவில்லை. நன்றி

   Delete
 9. நான் எட்டாவது படிக்கும்போது போனது அப்போ பார்த்த மாதிரியே அழகா ப்ரம்மாண்டமா இருக்கு ..அதை நல்லவிதமா மெயின்டெய்ன் செய்றாங்க ..படங்கள் அனைத்துமே அழகு

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...