18 November 2016

புதுச்சேரி (பாண்டிச்சேரி ) பயணம்.....



புதுச்சேரி எனவும் பாண்டிச்சேரி, புதுவை எனவும் அழைக்கப்படும் இந்நகரம், சென்னை மாநகரில் இருந்து 170 கி.மீ. தொலைவில், வங்கக் கடலோரத்தில் அமைந்த நடுவண் அரசின் பிரதேசமாகும்.


இது பிரெஞ்சு நாட்டின் பகுதியாக இருந்தது. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் பிரெஞ்சுச் சொற்களை வெகு லாகவமாக அடித்தட்டு மக்களும் பயன்படுத்தும் இடமாகவும் இருக்கிறது.


ஆந்திர மாநிலத்தின் காக்கி நாடாவுக்கு அருகாமையிலுள்ள ஏனாம் நகரும், தமிழகத்தின் நாகப்பட்டினத்தின் அருகாமையிலுள்ள காரைக்கால் நகரும், கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டுக்கு அருகிலுள்ள மாஹே நகரும் இந்த மாநிலத்தின் (ஆட்சிப் பகுதியின் பிராந்தியங்கள்) அங்கமாகையால், ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் மொழிகளுடன், தெலுங்கு, மலையாளம் மொழி பேசும் மக்களும் சிறுபான்மையாக இருக்கிறார்கள்.





 எங்கள்  சுற்றுலா  இந்த முறை புதுவையில்.......





இனிவரும் பகுதிகளில்  புதுவையின் சில சுற்றுலா தளங்களை காணலாம்...


  "புரொமெனேட் பீச்" 



 "புரொமெனேட் பீச்"   என அழைக்கப்படும் இந்த  அழகிய கடற்கரையில் காந்திசிலை கம்பீரமாக காட்சித்  தருகிறது. இங்கிருக்கும் தூண்களில் அழகிய சிற்பங்களும் செதுக்கப்பட்டிருக்கிறது...


 மேலும் இந்த கடற்கரையில் தான்  பாண்டிச்சேரியின் தலைமை செயலகம் , கார்கில் நினைவுச்சின்னம், பழைய கலங்கரை விளக்கம்,போர் நினைவுச்சின்னம், பழைய சுங்கச்சாவடி, டூப்ளே சிலை  என அனைத்தும் அமைந்து உள்ளன....



இணையத்திலிருந்து















( இந்த முறை கடற்கரையில் எடுத்த  படங்கள் தெளிவாகவே  இல்லை...)



 ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயம் 


இக்கோயில் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பிருந்து, 1666 அதாவது ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு கோவில் ஆகும். மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் ஆனது . புகழ் பெற்ற விநாயகர் கோயில்களில் .மணக்குள விநாயகரும் ஒருவர்...



    இக்கோவிலின் உட்பகுதின் மேற்கூரையில் விநாயகர் பற்றிய பல வண்ணப்   படங்கள் வரையப்பட்டு நம்மை பிரமிக்க வைக்கிறது....

   அனைத்து படங்களும் ரொம்ப அழகு...


  இங்குள்ள   சுற்றுச் சுவரில்   40   விதமான   விநாயகரின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது...








இணையத்திலிருந்து



இங்கு அருகிலே ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் இருக்கிறது...இந்த முறை காண முடியவில்லை....அடுத்த முறை ஆசிரமம் கண்டிப்பாக செல்ல வேண்டும்....

தொடரும்...



புதுவை சுண்ணாம்பாறு பாரடைஸ் கடற்கரை...( paradise beach )


புதுச்சேரி ...  ஊசிட்டேரி   ஏரி  (ousteri lake  )..,,,


 ஆரோவில் (Auroville )   உதய நகரம்.... 


ஆரோவில் (Auroville )  அன்னை 


ஆரோவில்  கடற்கரை ( aurovile beach  )..



அன்புடன்
அனுபிரேம்


5 comments:

  1. அழகிய புகைப்படங்கள் விளக்கங்களும் நன்று தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. இரண்டு ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரிக்கு சென்று வந்த நினைவுகள் மனதில் வலம் வருகின்றன
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  3. I have been to this place, but only for 2 hours after 6 p.m. Plan to visit i s one more time.

    ReplyDelete
  4. இந்த இடங்களுக்கு சென்று இருக்கிறேன்.
    படங்கள் எல்லாம் அருமை.

    ReplyDelete
  5. அங்கிருந்த போது ஒரே வாரத்திலே இரண்டு மூன்று முறை சென்று வந்த இடங்கள். சிறிய ஊர் அதுவும் கடைகள் எல்லாமே காந்தித் தெருவைச் சுற்றி இருந்ததால் ஆஸ்ரமம், மணக்குள விநாயகர், பீச் ரோடு பீச்சை ஒட்டி இருக்கும் பார்க் நன்றாக இருக்கும் இப்படிப் பல இடங்கள் மகனுடனும்அ தோழிகளுடன் சுற்றியதுண்டு...

    கீதா

    ReplyDelete