30 December 2016

திருமண்டங்குடி.. தொண்டரடி பொடியாழ்வார் அவதார ஸ்தலம்

  ஆழ்வார் கோவில்  எனப்படும் ஸ்ரீரங்கநாதர்  திருக்கோவில்,

தொண்டரடிப்பொடியாழ்வார் அவதார ஸ்தலம்,


திருமண்டங்குடி.


தொண்டரடிப் பொடியாழ்வார்..


சோழநாட்டில்   திருமண்டங்குடியில்   மார்கழி மாதத்தில்   கேட்டை நட்சத்திரத்தில்  (தேய்பிறை சதுர்த்தசி திதியில்) அவதரித்தவர்.

இவர் அருளிச் செய்த திவ்வியப் பிரபந்தங்கள் இரண்டு.

அவை:

1. திருமாலை - 45 பாசுரங்கள்

2. திருப்பள்ளி எழுச்சி - 10 பாசுரங்கள்

இவர் இயற்பெயர் விப்ரநாராயணர்.


ஆழ்வார் கோவில்  எனப்படும் ஸ்ரீரங்கநாதர்  திருக்கோவிலில்,

  கடந்த   27 ஆம்  தேதி ( 27.12 . 2016 )  தொண்டரடிப் பொடியாழ்வாரின்  அவதார   உற்சவம்    நடைப்பெற்றது...


அப்பொழுது எடுத்த படங்கள் இன்று உங்கள் பார்வைக்கு....



கருடவாகனத்தில்   பெருமாள்




அன்ன வாகனத்தில்  தொண்டரடி பொடியாழ்வார்












வாகனத்தில்  வீதி உலா







இப்படங்கள் எல்லாம் அப்பா  அனுப்பியவை....


திருமண்டங்குடி...செல்லும் வழி...



1.   தஞ்சாவூர்  - பாபநாசம்   -     புள்ளபூதங்குடி யில் இறங்க வேண்டும் ... அங்கு திருமண்டங்குடி. செல்லும் மினி பஸ்   கிடைக்கும்...


2.  கும்பகோணத்திலிருந்து  திருவைகாவூர்   செல்லும் டவுன் பஸ்  ஏறினால்    கூனசஞ்சேரி யில் இறங்க வேண்டும்...

அங்கிருந்து 1௦  நிமிட நடை பயணத்தில்...திருமண்டங்குடி








மறம்சுவர் மதிளெ டுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு

புறம்சுவ ரோட்டை மாடம் புரளும்போ தறிய மாட்டீர்

அறம்சுவ ராகி நின்ற அரங்கனார்க் காட்செய் யாதே

புறம்சுவர் கோலஞ் செய்து புள்கவ்வக் கிடக்கின் றீரே.


  -தொண்டரடிப் பொடியாழ்வார்


முதல் திருமொழி (877)





அன்புடன்

அனுபிரேம்

6 comments:

  1. சிறப்பான தரிசனம்... நன்றிங்க...

    ReplyDelete
  2. சோழ நாட்டில் திருமண்டங்குடி என்றால் எபபடி புரியும்? தஞசாவூரிலிருந்து எப்படி போக வேண்டும்?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்....

      தஞ்சாவூரிலிருந்து திருமண்டங்குடி...செல்லும் வழியை... இப்பொழுது பதிவிலே சேர்த்து விட்டேன்...

      Delete
  3. அழகான படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  4. கும்பகோணத்திலிருந்துதான் இந்த இடத்துக்குப் போகணும். புள்ளம்பூதங்குடி, அதற்கப்புறம் திருமண்டங்குடி, அப்புறம் மற்ற வைணவத்தலங்கள் என்று காலை 8 மணிக்கு கும்பகோணத்தில் புறப்பட்டால், 12 மணிக்குள் தஞ்சை மாமணிக்கோவில்களுக்கு தரிசனத்துக்குச் சென்றுவிடலாம்.

    நான் சமீபத்தில் இருமுறை சென்றுவந்தேன்.

    ReplyDelete