24 December 2015

உடுப்பி கிருஷ்ணர் கோயில்


அனைவருக்கும் வணக்கம் ..

நாங்கள் நான்கு வருடங்களுக்கு முன் சென்ற.. ஒரு சுற்றுலா பற்றிய பதிவு  இன்று ...


நாங்கள் பெங்களூர் இருந்து ரெயில் மூலமாக  மங்களூர் சென்றோம் ...பின் பேருந்தில் உடுப்பியை அடைந்தோம் ....வாருங்கள் உடுப்பிக்கு போகலாம் ...


உடுப்பி கிருஷ்ணர் கோயில்

கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் கிருஷ்ணர். இக்கோயிவிலில் மத்வ புஷ்கரிணி எனும் தீர்த்தமுள்ளது.






சந்திரக் கடவுள் தனது மனைவிகளான இருபத்து ஏழு நட்சத்திரங்களுடன் கிருஷ்ணரை வழிபட்ட தலம். 

விஸ்வகர்மாவால் செய்யப்பட்டு துவாரகையில் ருக்மிணி தேவியால் வழிபடப்பட்ட  பாலகிருஷ்ணரின் திருவுருவம்  துவாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கி..... பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மத்வருக்குக் கிடைத்து, பின் மத்வராலேயே பிரதிஷ்டை செய்யப்பட்ட பாலகிருஷ்ணரின் திருவுருவமே உடுப்பி கிருஷ்ணரின் கோயிலில் உள்ளது.









   உடுப்பி பக்கம் இருக்கும் மால்பே கடலில் துவாரகையிலிருந்து வந்த ஒரு கப்பல் புயலில் சிக்கிக்கொண்ட சமயம் மத்வாச்சாரியார் கடற்கரையில் இருந்து அதை காப்பாற்றினார். கப்பலில் இருந்தவர்கள் அவருக்கு நன்றியைத் தெரிவிக்க என்ன வேண்டும் என்று கேட்க கப்பல் ஓரத்தில் கோபி சந்தனத்தால் ஆன கற்கள் இருப்பதை பார்த்து அதை வேண்டும் என்று கேட்டார். 


அதனுள்ளே இருந்துதான் இன்று நாம் பார்க்கும் ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகம் வந்ததாக சொல்கிறார்கள். இன்றும் மத்வ சமூகத்தினர் கோபி சந்தனத்தால்தான் திலகம் இட்டுக்கொள்கின்றனர். கோபி சந்தனம் துவாரகாவிலிருந்து இன்றும் இங்கே வருகிறது. ( கிலோ 30ரூபாய் ). இந்த திருமேனி ருக்மணியால் பூஜிக்கப்பட்ட கிருஷ்ணரின் சாளக்கிராமத்தாலான திருமேனி என்றும் நம்பப்படுகிறது.



       


தொடரும் ...

அன்புடன் 

அனுபிரேம் 


உடுப்பி கிருஷ்ணர் கோவில்  2





Image result for tamil ponmozhigal

1 comment:

  1. முன்கதை எதுவும் தெரியாது. 2004இல் உடுப்பி, கொல்லூர், சிருங்கேரி சென்றுவந்தேன்... குட்டி கிருஷ்ணனின் அழகு இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது...

    ReplyDelete