15 August 2017

நாட்டு வணக்கம்....
நாட்டு வணக்கம்....

பாரதியின் வரிகளில்....எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி 
      இருந்ததும் இந்நாடே-அதன் 
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து 
      முடிந்ததும் இந்நாடே-அவர் 
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து 
      சிறந்ததும் இந்நாடே-இதை 
வந்தனை கூறி மனதில் இருத்தி, என் 
      வாயுற வாழ்த்தேனோ-இதை 
'வந்தே மாதரம், வந்தே மாதரம்' 
      என்று வணங்கேனோ?


14 August 2017

ஆடி 28 நம்பெருமாள் ..காவேரி தாயாருக்கு சீர்வரிசை வைபவம்...ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில்..


நேற்று (13.8.2017 ) நம்பெருமாள் ஸ்ரீரங்கம் காவேரி கரை அம்மாமண்டபத்தில்... காலை எழுந்தருளி.... மாலையில் காவேரித்தாயருக்கு  பட்டு புடவை, மாலைகள் மற்றும் சிறிய உணவு மூட்டை போன்ற  மங்களப் பொருட்களை சீர்வரிசையாக வழங்கினார் ..

12 August 2017

அறப்பளீஸ்வரர் திருக்கோவில், கொல்லிமலைசங்ககாலத்தில் கொல்லிமலையானது சதுரகிரி என்றும்,
 ’அறமலை’ என்றும் அழைக்கப்பட்டது.

நான்கு பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட பகுதியாதலின் இதற்குச் 'சதுரகிரி' என்ற பெயர் ..

சதுரகிரி எனும் மலை உச்சியில் அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இங்குள்ள ஈசன் 'அறப்பளி மகாதேவன்', 'அறப்பளி உடையார்' என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.

அறை = சிறிய மலை. 
மலைமேல் உள்ள கோயில் = அறைப்பள்ளி.
 இறைவன் அறைப்பள்ளி ஈஸ்வரர். இப்பெயர் மருவி அறப்பளீஸ்வரர் என்றாயிற்று....
09 August 2017

வில்வித்தைப் போட்டி....


அன்பின் வணக்கங்கள்.....


முந்தைய பதிவில்  வல்வில் ஓரி . ...வில்வித்தைப் போட்டி 2௦17   பற்றிய தகவல்களை பகிர்ந்து இருந்தேன்...


இன்று மேலும்  சில  தகவல்கள்  ,,,இந்த போட்டி பற்றியும் அதன் வழிமுறைகளை பற்றியும்....


04 August 2017

வல்வில் ஓரி . ...வில்வித்தைப் போட்டி 2௦17அன்பின் வணக்கங்கள்....வல்வில் ஓரி ...வில்வித்தைப் போட்டி 2௦17

செம்மேடு,கொல்லி மலை,நாமக்கல்..


ஆண்டுதோறும்  ஆடி மாதம் 18 ஆம் தேதி சேரமன்னன் வல்வில் ஓரியின் நினைவாக  வில்வித்தைப் போட்டி  செம்மேடு,கொல்லி மலையில்  நடைப்பெறுகிறது.....அதை பற்றிய ஒரு மகிழ்வான பதிவு இன்று....


01 August 2017

அந்தர்வாகினி...இந்த மாத புத்தக அலமாரியில் அந்தர்வாகினி...

( நதியாய் அவள் ஓடமாய் நான்...)இதன் ஆசிரியர் சீதாலெட்சுமி....அவரின் தளம்


எனக்கு மிக பிடித்த நாவல் ஆசிரியர்..

பெரும்பாலும் இவரின் அனைத்து கதைகளும் எனக்கு பிடிக்கும்..

ஒவ்வொன்றும் ஒரு விதம்..அனைத்திலும் உணர்வுகளின் வழி கதையை  நகர்த்துவார்.....


30 July 2017

போளி / உப்பட்டு..


வணக்கம்  நட்புகளே......

இன்று ஒரு இனிப்பான பதிவு.... போளி..

 ஆனால் இன்றைய  போளியில் ...ஏதும் போலி இல்லை.....

அம்மா செய்யும் பராம்பரிய முறையில் செய்ததது...

 போளி செய்தவுடன் சூடாக பதிவிட முடியவில்லை....கொஞ்சம் 3 மாதங்கள் ஆறிய பின்னே இன்றைய பதிவு...


அதுவும்  எங்கள் ப்ளோகில் "திங்க"க் கிழமை :: இனிப்பு போளி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி     வருவதற்கு முன்னே செய்தேன்...ஆனால் அங்கு பார்க்கவும் தான் பதிவிடும் ஆசை வந்தது....28 July 2017

மேதகு அப்துல்கலாம் அவர்களின் மணிமண்டபம்.......காலத்தை வென்ற கலாம்!’ஏவுகணை நாயகன்’ என்று போற்றப்படுகிற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின்  நினைவிடத்தை ராமேஸ்வரம் அருகில் உள்ள பேக்கரும்பு பகுதியில் பிரதமர் மோடி நேற்று (27.7.2௦17)  திறந்து வைத்தார்.பேக்கரும்பு பகுதியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் நினைவிடம், அவரது சாதனைகளைப் போற்றும் வண்ணம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 


மொகலாயர் மற்றும் இந்திய கட்டிடக் கலையை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 


நினைவிடத்துக்குள் கலாமின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் வண்ணம் 4 அறைகளில் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


 நினைவிடத்தின் பிரதான நுழைவுவாயில் மும்பையில் உள்ள இந்தியா கேட்டை நினைவுபடுத்தும் விதமாகவும், கதவுகள் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் கதவுகளைப் போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.அதேபோல, கட்டிடத்தின் கூம்புவடிவக் கோபுரம் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ளது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. 


ஏவுகணை நாயகனைக் கௌரவிக்கும் வகையில், அக்னி ஏவுகணை ஒன்றின் மாதிரியும் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 


இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனையான போக்ரான் சோதனையில் கலாம் முக்கிய பங்காற்றியவர் என்பதால், அந்த நிகழ்வு குறித்த பிரத்யேக புகைப்படங்களும் நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.பூக்கள் மீது பேரன்பு கொண்ட கலாமின் நினைவிட வளாகம் பூச்செடிகள் மற்றும் புற்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

 இந்த அமைப்பு குடியரசுத் தலைவர் மாளிகையின் மொஹல் தோட்டத்தின் வடிவமைப்பில் பணியாற்றிய பெங்களூருவைச் சேர்ந்த ஆர்ஐசி என்ற தனியார் நிறுவனம் ஈடுபடுத்தப்பட்டது.
கலாம் நினைவிடத்தில் இரண்டாம் கட்டமாக நூலத்துடன் கூடிய அறிவுசார் மையம், கோளரங்கம் மற்றும் மக்கள் கூடும் வகையிலான பெரிய அரங்கம் போன்றவையும்  கட்டப்பட இருக்கின்றன. 27 July 2017

ஸ்ரீ ஆண்டாள் வைபவங்கள்....


நேற்றைய பதிவில்  ஸ்ரீ ஆண்டாள்   அவதார திருநட்சத்திரமான ஆடிப்பூரம் பற்றியும்....

மேலும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் பிறப்பு,

சிறப்புகளையும் தரிசித்தோம்.....

அள்ள அள்ள குறையாத அமுத சுரப்பி போல் அவரின் வைபவங்கள் இன்னும் பல பல உள்ளன....


அவை அனைத்தையும் படிக்க படிக்க,...

கேட்க கேட்க  .....

ரசிக்க, ரசிக்க

ஆசை அதிகமாகவே செய்யும்...

அதனாலே  மீண்டும் ஒரு   பதிவு....


இன்று 27. 7. 2௦17.... ஸ்ரீவில்லிபுத்தூர் திருவாடிப்பூரத் தேரோட்டம்......25 July 2017

ஆடி -பூரம் .... ஆண்டாள் அவதார திருநட்சத்திரம்...
ஆண்டாள் அவதாரம் (ஆடிப்பூரம்) அன்று ..... ஏழாம் நூற்றாண்டு,

 நள ஆண்டு,

 ஆடி மாதம்   செவ்வாய்க்கிழமை,

பூரம் நட்சத்திரம்,

சுக்லபட்சம் பஞ்சமி திதி,

19 July 2017

பீச்சி அணை (peechi dam) பூங்கா , திருச்சூர்....

அனைவருக்கும் வணக்கங்கள்...

முந்தைய பதிவில்

  திருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோயிலையும்,


 பீச்சி அணையும்  பார்த்தோம்.... .....இன்று  பீச்சி அணையில் உள்ள பூங்காவின் காட்சிகள்...


வண்ண ....வண்ண மலர்களின் புன்னகைகளுடன்....
17 July 2017

ஸ்ரீமத் நாதமுனிகள் ...

வீரநாராயணப்பெருமாள், காட்டுமன்னார்குடி..

நாதமுனிகளார் அவதார ஸ்தலம்...

வைணவத்திற்கு மிகப் பெரும் தொண்டாற்றிய ஸ்ரீமத் நாதமுனிகள், அவரது பேரர் யமுனைத்துறைவர் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ ஆளவந்தார் ஆகிய இருவரும் அவதரித்த ஸ்தலம்..

 ஸ்ரீமத் நாதமுனிகள்  திருநட்சத்திரம் ஆனி அனுஷம்,   (5.7.2017) அன்று
காட்டுமன்னார் கோவிலில் நடைபெற்ற  உற்சவத்தில் அப்பா எடுத்த படங்கள் இன்று உங்கள் சேவைக்கு....


09 July 2017

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஜ்யேஷ்டாபிஷேகம்...
கடந்த   ஜுலை 7ம்தேதி (2017)  நம்பெருமாளின் ஜ்யேஷ்டாபிஷேகம்
(பெரிய திருமஞ்சனம்) ..."ஜேஷ்டா" என்றசமஸ்கிரத  சொல்லுக்கு  "பெரிய '" என்று பொருள்....  ஜ்யேஷ்டா"  நக்ஷத்திரம் (கேட்டை )  என்றால் பெரிய நக்ஷத்திரம் என்றும் பொருள் கொள்ளலாம் ...

அரங்கனுக்கு வருடாவருடம் ,....

ஆனி மாதம், ஜ்யேஷ்டா (கேட்டை ) நக்ஷத்திரத்தன்று ,விசேஷமாக  திருமஞ்சனம் நடைபெறும் ....

இந்த ஆனி மாதத்தில், ஜ்யேஷ்டா நக்ஷத்திரத்தில் ,

"பெரிய நதியான"   தென்  திருக்காவிரிலிருந்து ,

"பெரிய கோபுரமான "  ராஜ கோபுரத்தின் வழியே ,

தீர்த்தம் கொண்டு வரப்பட்டு,

விசேஷமாக ,"பெரிய கோயிலான"  அரங்கன் ஆலயத்தினில் உள்ளே எழுந்தருளிக் கொண்டிருக்கும்   அரங்கனுக்கு ,

பெரிய திருமஞ்சனம் (அபிஷேகம்)  செய்யப்படும் ....பெரிய நட்சத்திரத்தில் ,

பெரிய நதியில் இருந்து ,

பெரிய கோபுரத்தின் வழியே ,

பெரிய அளவில் (28 குடங்களில் ),

பெரிய கோயிலில் உள்ள ,

பெரிய பெருமாளுக்கு ,

பெரிய அளவில் ,

வெகு விமரிசையாக நடைபெறும் ,திருமஞ்சனம் என்பதாலேயே இதற்கு "பெரிய திருமஞ்சனம்" என்று பெயர்.....

வருடத்தில் பதினோரு மாதங்கள் ,(ஐப்பசி தவிர ) ஸ்ரீரங்கத்தின் வடக்கு பகுதியில் ஓடும் ,வட திருக்காவிரியில் இருந்து ,யானை மீது தீர்த்தம் கொண்டு வரப்படும் .....

ஆனால் இந்த "பெரிய திருமஞ்சனத்திற்கு "  மட்டும்   வழக்கம்போல், கொள்ளிடக்கரையிலிருந்து தீர்த்தம் எடுக்காமல்,   ஸ்ரீரங்கத்தின் தெற்குப் பகுதியில்- அம்மா மண்டபத்தின்                           காவிரியிலிருந்து   தீர்த்தம்  எடுத்து வருவார்கள்...
( ஆனால் இந்த வருடம் அம்மா மண்டபத்தில் நீர் இல்லாதலால் ..கொள்ளிடக்கரையிலிருந்து தீர்த்தம் எடுத்தார்கள்..)
07 July 2017

பீச்சி அணை (peechi dam) , திருச்சூர்

அனைவருக்கும் வணக்கங்கள்...

முந்தைய பதிவில்  திருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோயிலை
பார்த்தோம்....

இன்று பீச்சி அணை .....இது  திருச்சூர் நகரத்திற்கு வெளியே 22 கிமீ  தொலைவில் உள்ளது.....

திரிச்சூரின் சுற்றியுள்ள கிராமங்களுக்கான நீர்ப்பாசன திட்டமாக இந்த  அணை தொடங்கப்பட்டது. இது ஒரு பாசன அணை....

 மணாலி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணை சுமார் 3,200 ஏக்கர் (1,300 ஹெக்டேர்) பரப்பளவு பரந்த தோட்டக்கலைகளோடு பரந்து விரிந்துள்ளது.


 மிகவும் பசுமையான, குளுமையான இடம்...04 July 2017

திருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோயில்....

வாழ்க வளமுடன்...


ஒரு சிறிய சுற்றுலா பகிர்வு இந்தமுறை....பணி நிமித்தமாக கணவர்  கேரளாவில் உள்ள திருச்சூர் சென்றார்...அப்பொழுது அங்கு பார்த்து ரசித்தவைகளை எங்களுக்கு படங்களாக எடுத்து வந்தார்...அப்படங்களுடன் கூடிய ஒரு சிறிய பயண பதிவு...திருச்சூரில் உள்ள மிகப்பெரிய  கோவில் வடக்கு நாதர் கோவில். நகரத்தின் மைய பகுதியில் உள்ள இக்கோவில்36 ஏக்கர் பரப்பளவில்  பரந்து  விரிந்து கிடக்கிறது. ...நான்கு புறமும்  கோபுரங்களுடன் மிக பெரிய கோவில்..
LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...