21 March 2018

கருப்பு உளுந்து இட்லி பொடி..

அன்பான காலை வணக்கங்கள்..

வாழ்க வளமுடன்..


இன்றைய சமையலில் ஒரு எளிய பொடி...கருப்பு உளுந்து இட்லி பொடி..








தேவையானவை

கருப்பு உளுந்து -1 க

க.பருப்பு       -1 க

அரிசி               -1 க

எள்ளு           -1 க

வரமிளகாய் -20


மிளகு
கறிவேப்பில்லை
பெருங்காயம்
உப்பு



















செய்முறை

அனைத்து பொருட்களையும் தனி தனியாக வறுத்து ..... பிறகு நன்றாக அரைத்தால்.... நமது  கருப்பு உளுந்து இட்லி பொடி தயார். 







இது  இட்லிக்கும் சூடான சாதத்திற்க்கும்  நன்றாக இருக்கும்...😊😊😊😊😊


அன்புடன்
அனுபிரேம்


13 comments:

  1. அரிசி, மிளகு இல்லாமல் இது போல் செய்வேன்.
    சாதத்திற்கும் என்பதால் அரிசி, மிளகு சேர்க்க சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
    இப்படியும் செய்துப் பார்க்கிறேன்.

    படங்கள் அழகாய் இருக்கிறது.

    பாரதியின் வீர பெண் அருமை.

    ReplyDelete
    Replies
    1. செய்து பாருங்கள் அம்மா ..நல்லா இருக்கும்...

      Delete
  2. ஹை அனு!! சூப்பரா இருக்கே!!! நான் கறுப்பு உளுந்து போட்டுத்தான் மிளகாய்ப் பொடி (நாங்கள் இட்லி பொடியை அப்படிச் சொல்லிப் பழகிவிட்டது!!! இல்லை என்றால் தோசை மிளகாய்ப் பொடி) செய்வது வழக்கம்..... அப்புறம் வர மிளகாய்க்குப் பதில் மிளகு மட்டும் சேர்த்தும் செய்ததுண்டு....ஆனால்.அரிசி சேர்த்ததில்லை அதுவும் இத்தனை அளவு ஒரு கப் அளவு.....அரிசி தவிர மத்ததெல்லாம் சேம் அளவு தான்....

    உங்கள் குறிப்பையும் குறித்துக் கொண்டேன்..அரிசியும் சேர்த்துச் செய்து பார்க்கிறேன்....பச்சரியா? எங்கள் வீட்டில் மிளகாய்ப் பொடியும் தீரும் நிலை. உங்கள் குறிப்பைச் செய்து பார்த்துட்டுச் சொல்லிடறேன்...சூப்பர்!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சில நேரம் நான் அரிசி சேர்க்காமலும் செய்வேன் கீதாக்கா..அதுவும் நல்லா இருக்கும்..

      பச்சரிசி தான்...செஞ்சு பாருங்க..

      Delete
    2. ஒகே பச்சரிச்தான் இல்லையா...சரிவறுத்துக் கொண்டிருக்கிறேன்....செய்துட்டு சொல்லறேன்...

      கீதா

      Delete
  3. கருப்பு உளுந்தில் வடை அப்புறம் அழகர்கோவில் தோசை தான் செஞ்சிருக்கேன் .இது வித்யாசமா இருக்கே .சாதத்துடன் பிசைந்தும் சாப்பிட நல்லா இருக்கும் .ரெசிப்பிக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. கருப்பு உளுந்தில் பெருமாள் வடை செய்வாங்க ..நல்லா இருக்கும்...விரைவில் வடையோடு வரேன் அஞ்சு..

      Delete
  4. கருப்பு உளுந்து அவ்வளவாகக் கிடைப்பதில்லை. கோமதி அக்கா சொல்லி இருப்பது போல நாங்களும், மிளகு, அரிசி இல்லாமல் செய்வோம். இந்தச்சுவையில் சுவைத்துப்பார்க்கவும் ஆவலாக இருக்கிறது.

    அப்புறம் அனு சகோ... நீங்க கதை அனுப்பி ரொம்ப நாட்களாச்சே....

    ReplyDelete
    Replies
    1. ஆமா ..இந்த உளுந்து ஊரில் வாங்கி வந்தது..இங்க கிடைக்காது..

      தம்பி ,இன்னும் டீ வரலன்னு சொல்றது போல் இருக்கு சகோ..விரைவில் கதை அனுப்புறேன்..

      Delete
    2. ஸ்ரீராம் எங்க ஏரியாவில் எல்லா கடைகளிலும் கறுப்பு உளுந்து கிடைக்கிறது..ஹான் எல்லா கடைகளுமே அண்ணாச்சிக் கடைகள்!!! அப்புறம் அரிசி மண்டி இருக்கு இல்லையா அங்கு கிடைக்கிறது...

      கீதா

      Delete
  5. நானும் இட்லி மிளகாய்பொடிக்கு அரிசி சேர்ப்பேன். இது தோசைக்கும் ஓகேவா இருக்குமென நினைக்கிறேன். பார்க்க நல்லா,வித்தியாசமா இருக்கு. கறுப்பு உளுந்து உடம்புக்கும் நல்லது. நன்றி அனு.

    ReplyDelete