13 September 2017

கிருஷ்ணா...கண்ணா...கோவிந்தா...


வாழ்க நலம்....



 தஞ்சாவூர் கண்ணாடி  ஓவியத்தில்   இன்று.... 


மயக்கும் மாய கண்ணன்....
















இரு மாதங்களுக்கு முன் வரைந்தது...

பார்த்து பார்த்து பொறுமையாக  ஒரு வாரம் வரைந்தும் .....

கடைசியில் அந்த நீல வண்ணம் தான் ....படுத்தியது....வரையும் போது சரியாக இருந்து....பின் காயும் போது ..அடுத்த வண்ணத்தில் ஊடுருவி....  அட ஒரே அடம்...அதனால் தாமரையின் அழகும் குறைந்தது....

 என்ன இனி இந்த நீல வண்ணத்திற்கு  பின்னணியில் இடம் இல்லை....


இதல்லாம் எப்படி இருப்பினும் ....💞💕💗  கண்ணன் அழகு தான்...😊😊😂



எங்களுக்கு  இன்று தான் கிருஷ்ண ஜெயந்தி........


அதனால் தான் இந்த சிறப்பு பதிவு.....



தீராத விளையாட்டுப் பிள்ளை

தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை (தீராத)


தின்னப் பழங்கொண்டு தருவான் - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்:
என்னப்பன் என்னைய்யன் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான் (தீராத)


அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழ அழச் செய்தபின் 'கண்ணை மூடிக்கொள்:
குழலிலே சூட்டுவேன்' என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான் (தீராத)



பின்னலைப் பின்னின் றிழுப்பான் - தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்:
வண்ணப் புதுசேலைதனிலே- புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்(தீராத)


புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்:
கள்ளால் மயங்குவது போலே - அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம் (தீராத)





பிருந்தாவனம்


பிருந்தாவனம் பிருந்தாவனம்
பெருமையின் மறுபெயரே பிருந்தாவனம்
ஸ்ரீகிருஷ்ணன் வாழ்கின்ற பிருந்தாவனம்
பிருந்தாவனம் பிருந்தாவனம்



கிருஷ்ணா என குரல் கொடுத்தாலே போதும்
யசோதை மைந்தன் வந்திடுவான்
அல்லல் எல்லாம் தீர்த்திடுவான் கண்ணனே
ஆனந்தமாய் கைகொட்டி சிரித்திடுவான்


சரணம் கிருஷ்ணா சரணம் கிருஷ்ணா
சரணம் கிருஷ்ணா சரணம் கிருஷ்ணா..



எண்ணத்தில் கண்ணனையே நினைத்துவிட்டாலே
தங்க கிண்ணத்தில் அமுதம் தருவான்
வண்ண மலராய் மாறிடுவான் கண்ணனே
அகமகிழ்வை அவனே அளித்திடுவான்


சரணம் கிருஷ்ணா சரணம் கிருஷ்ணா
சரணம் கிருஷ்ணா சரணம் கிருஷ்ணா..






அன்புடன்

அனுபிரேம்.....





7 comments:

  1. வாவ்... கண்ணன் அழகு.
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தங்கள் கைவண்ணம் அழகு.. அழகு!..

    ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி நல்வாழ்த்துகள்..

    நலம் வாழ்க..

    ReplyDelete
  3. ஓவியம் அருமை சகோ.

    ReplyDelete
  4. அழகாய் வரைந்திருக்கிறீர்கள். ஒவ்வொருவரிடமும் எவ்வளவு திறமை வைத்திருக்கிறீர்கள்...

    ReplyDelete
  5. செமயா இருக்குப்பா. நீ சொன்ன குறை எதும் தெரில..

    ReplyDelete
  6. அழகாய் வரைந்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
  7. மிக மிக அழகாய் வரைந்திருக்கிறீர்கல்! வாழ்த்த்துகள் பாராட்டுகள்!

    கீதா: அனு செம! வாவ்! ஹையோ செம திறமை உங்களிடம்! என்னமா வரைஞ்சுருக்கீங்க! சான்ஸே இல்லை...குறை கூடத் தெரியலை அத்தனையும் உங்கள் நுணுக்கமான திறமையில் அடிபட்டுப் போனது!! ரொம்ப அழகுபா...அந்தக் க்ளோசப் படம் வாவ்!! முகம் நன்றாக வந்திருக்கு...பொக்கே உங்களுக்கு!

    ReplyDelete