04 August 2017

வல்வில் ஓரி . ...வில்வித்தைப் போட்டி 2௦17அன்பின் வணக்கங்கள்....வல்வில் ஓரி ...வில்வித்தைப் போட்டி 2௦17

செம்மேடு,கொல்லி மலை,நாமக்கல்..


ஆண்டுதோறும்  ஆடி மாதம் 18 ஆம் தேதி சேரமன்னன் வல்வில் ஓரியின் நினைவாக  வில்வித்தைப் போட்டி  செம்மேடு,கொல்லி மலையில்  நடைப்பெறுகிறது.....அதை பற்றிய ஒரு மகிழ்வான பதிவு இன்று....

கொல்லி மலை பற்றி...


நாமக்கல்  மாவட்டத்தின் எல்லையாக அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடர் கொல்லி மலை...

கொல்லி மலை கிழக்கு தொடர்ச்சி மலையின் கடைசி மலையாக அமைந்துள்ளது.

நாமக்கல்லில் இருந்து 55 கி.மீ தொலைவிலும் கடல் மட்டத்தில் இருந்து 1000 முதல் 1600 மீட்டர் உயரமும் உள்ள இம்மலை வடக்கு தெற்காக 28 கி.மீ பரப்பளவும், கிழக்கு மேற்காக 19 கி.மீ பரப்பளவும், மொத்தத்தில் 441.4 சதுர கி.மீ பரப்பளவும் கொண்டுள்ளது.


கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகரங்களில் இருந்து அரசுப் பேருந்து மற்றும் தனியார் பேருந்து வசதிகள்  உள்ளது...
வல்வில் ஓரி 


கொல்லிமலை சேர வேந்தர்களால் ஆளப்பெற்ற பெருமையும், பழமையும் கொண்டதாகும். சேர மன்னர்களில் வள்ளலாக விளங்கியவர் வல்வில் ஓரி.

கடையேழு வள்ளல்களில் ஒருவர்.

ஓரி என்பதற்கு தேனின் முதிர்ந்த நிறம் என்று பெயர்.

இந்த நிறமுடைய குதிரையை இவர் பெற்று இருந்ததால் இவருக்கு ஓரி என்ற சிறப்புப் பெயர் கிடைத்தது.

இவருடைய இயற்பெயர் ஆதன்.


ஒரு வில்லாளி தான் எய்யும் ஒரே அம்பால் பலவற்றையும் துளைத்தும்போகும்படிச் செலுத்தும் வலிமை பெற்றிருந்தால் அவனை ‘வல்வில்’ என்று அழைப்பார்கள்.

ஒரே அம்பில் யானை, புலியின் வாய், புள்ளிமானின் உடல், காட்டுப் பன்றி, உடும்பின் தலை ஆகியவற்றை துளையிட்டு, 5 விலங்கினங்களைக் கொன்றார் என்ற சிறப்பே வல்வில் ஓரி என்ற பெயர் நிலைக்க காரணமாயிற்று.
வல்வில் ஓரியின் திறனைப் புகழ்ந்து பல பாடல்கள் உள்ளன.

இவர் நாமக்கல் ராசமாபுரமாகிய ராசிபுரம், கொல்லிமலை ஆகிய பகுதிகளை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.

ராசிபுரம் சிவன் கோயிலும், கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயிலும் வல்வில் ஓரி ஆட்சி காலத்தில் தான் கட்டப்பட்டவையாகும்.
இத்தகைய சிறப்பு மிக்க வல்வில் ஓரியின் நினைவாக செம்மேட்டில் 

...(செம்மேடு என்பது இவ்வனப்பகுதியில் உள்ள மையமான ஊராகும்)... .

'வல்வில் ஓரி' மன்னனின் சிலை  10 அடி உயரத்தில் இங்கு  அமைக்கப்பட்டு...
1975ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள்  'வல்வில் ஓரி விழா' நடத்தப்படுகிறது....


அவ்வாறு இந்த ஆண்டு  ஆகஸ்ட் 3ம்  தேதி  ( 3.௦8.17 ) நடைபெற்ற விழாவின் சிறப்புப் படங்கள் .....

வல்வில் ஓரி  மன்னனின் சிலை 
குறி இலக்குகள்


(யானை, புலியின் வாய், புள்ளிமானின் உடல், காட்டுப் பன்றி, உடும்பின் தலை)


இளம் சாதனையாளர்கள்

பார்வையாளர்கள்

கணவர் அங்கு சென்று கண்டு , கலந்து மகிழ்ந்து
 எடுத்த படங்கள்...

மேலும் பல செய்திகள் வரும்  பதிவுகளில்....


அன்புடன்
அனுபிரேம்..
7 comments:

 1. அனு! கொல்லி மலை பற்றியும், இந்நிகழ்வு பற்றியும் அறிவோம். நான் கொல்லிமலைக்கு இரு முறை சென்றிருக்கிறேன். அருமையான இடம். செம்மேட்டில்தான் எங்கள் பெரிய குடும்பமே நாங்கள் தங்கினோம்.பதிவும் பாதி இருக்கு ஆனால் படங்கள் இல்லாததால் அப்படியே ட்ராஃப்டில் இருக்கிறது. அப்போது கேமரா இல்லை அதனால் எடுக்கவில்லை.....அங்கு சென்றிருந்த போது இதனைத்தும் அறிய நேர்ந்தது...இந்த வில் போட்டி பற்றி உங்கள் கணவருக்குத் தெரிந்திருக்கும் என்று எனக்கு அன்று உங்களுடன் பேசும் போது தோன்றாமல் போய்விட்டது.. அதனால் சொல்லாமல் . மிக்க மகிழ்ச்சி...அனு உங்கள் கணவர் கலந்து கொண்டமைக்கு வாழ்த்துகள்!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நன்றி கீதாக்கா...

   அவருக்கு 6 மாதங்கள் முன்தான் தெரியும்...அதிலிருந்து அங்கு செல்ல ஆவலாகவே இருந்தார்...


   ஆனாலும் கீதாக்கா நீங்க ஒரு dictionary ...எல்லா விசயங்களையும்..அறிந்து வைத்து உள்ளீர்கள்...

   உங்களை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது...

   Delete
 2. அடடே... இப்படி ஒரு போட்டி நடக்கிறதா... தகவல் எனக்கு.

  ReplyDelete
 3. நன்றி நல்ல பதிவு சிறப்பான முறையில் பதிவு செய்யப்பட்டு உள்ளது

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. அழகான படங்கள். விரிவான செய்திகள்.
  உங்கள் கணவர் கலந்து கொண்டது அறிந்து மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. அறியாத செய்தி
  ஒருமுறையேனும் இப்போட்டியைக் கண்ணாரக் காண வேண்டம்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...