19 November 2015

சிக்க திருப்பதி, Sarjapur,பெங்களூர்

அனைவருக்கும் வணக்கம் ...


சிக்க திருப்பதி ...இந்த  கோவில் பெங்களூரில்  Sarjapur என்ற இடத்தில் உள்ள அழகான கோவில் ....இந்த இடம் silk  board இல் இருந்து 33 km தொலைவில் உள்ளது ....


இணையத்தி லிருந்து 




'சிக்க' என்றால் கன்னடத்தில்  சிறிய என்று பொருள்...எனவே இக்கோவிலை  சின்ன திருப்பதி எனவும் கூறலாம் ..  மிக அழகான கோபுரம் கொண்ட இக்கோவில் பெரிய கூட்டத்தை அற்ற அமைதியான இடத்தில் உள்ளது....


இணையத்தி லிருந்து 


கோயில்  காலை 06 மணி  முதல்   முற்பகல் வரையும் பின்  மாலையும் திறந்திருக்கும்.








இந்த கோவில் கட்டப்பட்டது  பற்றிய கதை -- 

இது அக்னி தேவனால் விஷ்ணுவின் தயவிர்காக  கட்டப்பட்டது. அக்னி தேவர்  கடுமையான வயிற்று வலி  நோயால் பாதிக்கப்பட்டார் . அப்போது பிரம்மா அவர் உடல்நலத்தை  குணப்படுத்த மூலிகை நிறைந்த 'Khandava' வனத்தை  நுகருமாறு  அவருக்கு அறிவுறுத்தினார் .

சர்ப்ப-ராஜா வாகியா இந்திரனின்  நெருங்கிய நண்பர் தக்ஷகன், அங்கு வசித்தார் . அக்னி காட்டை  சாப்பிட முயன்ற போதெல்லாம், இந்திரன் இடியுடன் கூடிய மழையை பெய்வித்தார் ..... ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் அர்ஜூனன் உதவியுடன், அக்னி 'Khandava' வனத்தை  எடுத்துக்கொண்டார் . இந்த காலத்தில், அவர் தனது 'தேஜஸ் 'யை  இழக்க நேரிடும் என்று தக்ஷகன்  அக்னிக்கு சாபமிட்டார்  .


இந்த சாபத்தில் இருந்து விமோசனம்  பெற,  அக்னி தேவர் ,விஷ்ணு பகவானின்  தயவை பெருமாறு  கிருஷ்ணர் கூறினார். எனவே  'சாப  விமோசனம் ' அடைய அக்னி தேவர்  இந்த வெங்கடேஸ்வரா கோயிலை எழுப்பினார் . எனவே தான் இங்கே இறைவன்  பிரசன்ன வெங்கடேஸ்வர்  என்று அழைக்கப்படுகிறார் ..






சனி கிழமை தோறும் இங்கு சந்தை நடை பெறும் ....அப்பொழுது  மிகவும்  fresh ஆன காய்கறிகள்  கிடைக்கும் ...




அன்புடன் 
அனுபிரேம் 

tamil-whatsapp-kavithai-funny-good-morning-images



3 comments:

  1. சிறப்பான கோவிலின் தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  2. நல்லதகவல்களுடன் ஒரு கோயில் அறிமுகம்! நன்றி சகோ!

    ReplyDelete
  3. Nice to know about the new temples. Thanks for sharing! 😊

    ReplyDelete