23 August 2015

திருவெள்ளறை




Mandapam in front side of Thiruvellarai Sri Pundarikakshan Perumal Temple
இணையத்தில் இருந்து



திருவெள்ளறை

108 திவ்ய தேசங்களுள் நான்காவது உள்ள திருக்கோவில் திருவெள்ளறை.
  
மூலவர் - புண்டரீகாட்சன். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

உற்சவர் - செந்தாமரைக்கண்ணன்.

தாயார் - பங்கஜ செல்வி, செண்பகவல்லி.

தல மரம் - வில்வம்.

பொய்கை - மணிகர்ணிகா, சக்ர, புஷ்கல, வராக, கந்த, பத்மப் பொய்கை.

பாடியவர்கள் - திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார்.

தலத்தின் பண்டைய பெயர்கள் - ஆதி திருவெள்ளறை, வேதகிரி.


வரலாறு


  கோயில் சுமார் 50 அடி உயரத்தில் வெண்மையான

பாறையால் ஆன ஒரு குன்றின் மீது இத்தலம்

 "அமைந்துள்ளதால் வெள்ளறை 'என்ற பெயர்

பெற்று மரியாதை நிமித்தமாக "திருவெள்ளறை '

ஆனது. முன் கோபுரம் பூர்த்தியாகாத நிலையில்

உள்ளது.



 புண்டரீகன் என்ற யோகி திருவெள்ளறையில் ஒரு

நந்தவனம் அமைத்து அதில் வளர்ந்த துளசியால்

பெருமாளையும் தாயாரையும் பூஜித்து வந்தார்.

இதில் மகிழ்ந்த பெருமாள் இவருக்கு தரிசனம்

கொடுத்தார். இதனாலேயே இங்குள்ள பெருமாள்

புண்டரீகாட்சப்பெருமாள் 'ஆனார்.



இணையத்தில் இருந்து


தலத்தின் சிறப்புகள்


திருவரங்கத்தைவிடப் பழமையான திருத்தலம் என்பதால் ஆதித் திருவெள்ளரை எனப்படுகிறது.

பெருமாளைத் தரிசிக்க 18 படிகள் கடக்க வேண்டும். இவை பகவத் கீதையின் 18 அத்தியாயங்களைக் குறிப்பது.

அடுத்த கோபுர வாயிலில் உள்ள நான்கு படிகள் நான்கு வேதங்களைக் குறிக்கின்றன. பலிபீடத்துக்கு அடுத்துள்ள ஐந்து படிகள் பஞ்சபூதங்கள்.

செந்தாமரைக் கணணனைத் தரிசிக்க இரண்டு வழிகள் உள்ளன.
உத்தராயணம் (தை முதல் ஆனி வரை திறந்திருக்கும்.)
தட்சணாயணம் (ஆடி முதல் மார்கழி வரை.)

இரவில் நேரம் கழித்து வந்த பெருமாளைத் தாயார் ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்ட நாழி கேட்டான் வாசல் உண்டு ...!


இங்கு தாயாருக்கு முதல் உரிமை ...








இணையத்தில் இருந்து




திருமங்கை ஆழ்வார் மற்றும் பெரியார்வார் இந்தப் பெருமாளைக் குறித்துப் பாடியவை மொத்தம் 24 பாடல்கள்.


பெரியாழ்வாரின் பிள்ளைத்தமிழ் ....

கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய உதை செய்த
பிள்ளையரசே. நீ பேயைப் பிடித்து முலை உண்ட பின்னை
உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளிஉடை வெள்ளறை நின்றாய்.
பள்ளி கொள் போது இதுவாகும் பரமனே. காப்பிடவாராய்.

திருமங்கை ஆழ்வார்  அருளியது ...

துளக்கமில் சுடரை அவுணனுடல்
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப்போய்
அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருள்
விளக்கினை சென்று வெள்ளறைக் காண்டுமே.



தொடரும் ....


அன்புடன் 
அனுபிரேம்
Image result for tamil quotes

5 comments:

  1. வணக்கம் தோழி!

    என்னை இன்று திரிவெள்ளாறு புண்டரீகாட்சப் பெருமான் கூட்டிவந்துவிட்டார்!
    அருமையான கோயில் வரலாறு. பதிகங்களும் மிகச் சிறப்பு!

    அறியாதன அறிந்தேன் தோழி!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அருமையான தகவல்கள் சகோதரி!

    ReplyDelete
  3. அருமை அனு. சிறப்பான படங்கள்,தகவல்கள் மூலம் திருவெள்ளறை புண்டரீகாட்சபெருமாள் பற்றி அறியமுடிந்தது. நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் ....இந்த படங்கள் இணையத் தில் கிடைத்தவை ..வருகைக்கு மிகவும் நன்றி

      Delete