29 June 2015

பெங்களுர் பன்னேர்கட்டா தேசிய பூங்கா 3



அனைவருக்கும் காலை  வணக்கங்கள் .....

முந்தைய  பதிவில் பெங்களுர் பன்னேர்கட்டா தேசிய பூங்கா வின்  சபாரி  மற்றும்  பெங்களுர் பன்னேர்கட்டா தேசிய பூங்கா வின் வண்ணத்து பூச்சி  அரங்கையும்  ரசித்தோம் ....அடுத்ததாக  நாம் பெங்களுர் பன்னேர்கட்டா தேசிய பூங்காவில் உள்ள விலங்குகளை பார்க்கலாமா  ....





வெள்ளை  மயில் 

ஆமை  கூட்டம் 

மயில் 





கரடியார் 



சிறுத்தை 

மான் கூட்டம் 








படகு சவாரி 
நீர் யானை 



எங்களது  சுற்றுலா படங்களை கண்டு மகிழ்ந்த அனைவருக்கும் மிகவும்
 நன்றி ..../




அன்புடன் 
அனுபிரேம் 


Image result for TAMIL QUOTES IMAGES


24 June 2015

பெங்களுர் பன்னேர்கட்டா தேசிய பூங்கா 2


பெங்களுர் பன்னேர்கட்டா தேசிய பூங்காவின்  சபாரிக்கு பிறகு நாங்கள்
வண்ணத்துப்பூச்சிகள் பூங்காவிற்கு சென்றோம்  .....



வண்ணத்துப்பூச்சிகள் பூங்கா(இணையத்தில்  இருந்து )--


பயோடெக்னாலஜி துறை,  மாநில பூங்காவில் ஆணையம் மற்றும்  இந்திய அரசு, கூட்டாக இணைந்து  ஒரு சிறப்பு திட்டத்தின்  கீழ் 2003 ஆம் ஆண்டு போது துவக்கப்பெற்று, 2007 ஆம் ஆண்டு கட்டுமான பணி முடிவடைந்து  சுற்றுலா பயணிகளின்  பார்வைக்காக  திறக்கப்பட்டது  இந்த வண்ணத்துப்பூச்சிகள் பூங்கா .

முழு பூங்கா சுமார் 7.5 ஏக்கர் தோட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது. சுமார் 1 கிமீ நீளம் 'பட்டாம்பூச்சி பாதை' உள்ளது ,மேலும் ஒரு புதுமையான  மூன்று குவிமாட அமைப்புடன்  வடிவமைக்கப்பட்ட இடம்   இது ..


 ஒருவகையான பாலிகார்பனேட் கூரையில் இத்தோட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தோட்டம் என்ற 10,500 சதுர அடி கொண்ட பெரிய குவிமாடம் வடிவ அமைப்பு ஆண்டு முழுவதும் புரவலன் தாவரங்கள் மற்றும் பட்டாம்பூச்சிகளுக்கு தேவையான   அனைத்து வசிப்பிடத் தேவைகளையும்  வழங்குகிறது ...









































தொடரும் .....

அன்புடன்
அனுபிரேம்

Image result for TAMIL QUOTES IMAGES

20 June 2015

பெங்களுர் பன்னேர்கட்டா தேசிய பூங்கா

வணக்கம் .....வாழ்த்துக்களுடன்  உங்கள் அனைவரையும்  மீண்டும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி.

இந்த முறை கோடை விடுமுறையில் நாங்கள் பெங்களுர் பன்னேர்கட்டா தேசிய பூங்காவிற்க்கு சென்றோம்.  நல்ல சுற்றுலா தளம் குழந்தைகளுடன் சென்று ரசிக்க வேண்டிய இடம்....




பெங்களுர் பன்னேர்கட்டா தேசிய பூங்கா (இணையத்தில்  இருந்து )--

இது பெங்களூரிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பெங்களூர் காட்டுப் பகுதியின் கீழ் வரும் பன்னேர்கட்டா  பூங்கா 104 சதுர கிலோமீட்டர் பரப்பில் மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இது  பாதுகாக்கப்பட்ட பத்து காடுகளில் ஒன்றாகாவும்  இருந்து வருகிறது.

1971-ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த பூங்காவில் மிருகக்காட்சி சாலை, குழந்தைகள் பூங்கா, மீன்கள் காட்சியகம், முதலை பூங்கா, அருங்காட்சியகம், வண்ணத்துப்பூச்சி பூங்கா, பாம்பு பண்ணை முதலியவைகளோடு வளர்ப்பு பிராணிகளுக்கான தனி இடமும் இருக்கிறது.
பன்னேர்கட்டா  உயிரியல் பூங்கா, புலி மற்றும் சிங்கங்களுக்காக பிரபலமானது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் உள்ள பூங்காக்காளில் சிங்கங்களுக்காக பிரத்யேகமாக செயல்பட்டு வரும் பூங்காக்களில் பன்னேர்கட்டா  ஒன்று.
இங்கு வனத்துறையால் ஏற்பாடு செய்யப்படும் வாகனங்களில் சவாரி செய்து  புலி, சிங்கங்களோடு நாம் மற்ற விலங்குகளையும் பார்த்து ரசிக்கலாம்.

முதலில் நாங்கள்  சபாரி சென்றோம் .....கம்பி போட்ட வேன்களில் நாங்கள் செல்ல  மிருகங்கள் எங்களை பார்த்தன... மன்னிக்கவும் நாங்கள் தான் அவைகளை கண்டோம் ... அவைகள் தினமும் எங்களை போல் பல பேரை காண்பதால் அலட்டவே இல்லை ... அதிலிலும் சிங்கள் மிகவும் ரம்மியமான உறக்கத்தில் இருந்தன...

இப்ப வாங்க எங்க சபாரி புகைபடங்களை காணலாம்


யானை குடும்பம் 









கரடியார் 





சிங்க ராஜா தூக்கத்தில் 





புலியார் 
















தொடரும் .....

பெங்களுர் பன்னேர்கட்டா தேசிய பூங்கா  -2

பெங்களுர் பன்னேர்கட்டா தேசிய பூங்கா -3


அன்புடன்
அனுபிரேம்


Image result for TAMIL QUOTES IMAGES